குருணாகலில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பமே கைது!
குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பத்தையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 22 போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேயான்கொட பிரதேசத்திலிருந்து வேன் ஒன்றில் வந்து, இரண்டாயிரம் ரூபா கொடுத்து மரக்கறி வாங்கிய போது, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய், மகள், மருமகன் மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2000 ரூபா பெறுமதியான இருபது போலி நாணயத்தாள்களும் 1000 ரூபா பெறுமதியான இரண்டு போலி நாணயத்தாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment