கொலைக்கு கொலையா?? சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான நபர் படுகொலை!
நீர்கொழும்பு கதிரான, தெமங் சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் கதிரான பிரதேசத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு 3 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் செல்லும்போது மோட்டார் வண்டியில் பயணித்த நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment