இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சசீந்ரவாம்....(?)
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாவார் என அவருக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
கதிர்காமம் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது, உரையாற்றிய பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் இந்த முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷதான் எங்கள் டீ.ஏ. ராஜபக்ஷ முதலில் கண்ட பேரன். அவர் வேகமான அரசியல் பயணம் மேற்கொள்கிறார். நிச்சயமாக இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்“சியின் தலைமைப் பதவியை ஏற்பார். அதன் பிறகு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாவது எங்கள் சசீந்ர ராஜபக்ஷவே” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment