Sunday, July 6, 2014

விமல் - சோபித்த பேச்சுவார்த்தை ஆரம்பம்…!

நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்புக்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையே நாளை மறுதினம் (08) பத்தரமுல்ல, ஜயந்திபுரவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் குறிப்பிடுகிறார்.

நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபத்த தேரரின் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அவ்வமைப்பு இணங்கியுள்ளதாகவும், அதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் பிரிவு உடன்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் தேசுமுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

இப்பேச்சுவார்த்தையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அரசியல் பிரிவு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com