Saturday, July 19, 2014

ஜந்தாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடாத்திய அதிபர்! பிணையில் விடுதலை!

மாணவர்கள் மூலம் மாணவிக்கு தாக்குதல் நடத்திய அதிபர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பக்கமூன பொலிஸ் பிரிவிலுள்ள தியபெதும நாமல் ஓயா ஆரம்பப்பாடசாலை அதிபரே ஐயாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தியபெதும நாமல் ஓயா ஆரம்பப்பாடசாலையில் கல்விபயிலும் பத்துவயது பாடசாலை மாணவி ஒருவர் வகுப்பறையை சுத்தம் செய்யாததற்கு தண்டனையாக மாணவி வாந்தி எடுக்கும் வரை சக மாணவர்களைக் கொண்டு அதிபர் மண்டையில் குட்டவைத்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ தினம் சிறுமி பாடசாலைக்கு தாமதமாக வந்ததால் வகுப்பை சுத்தம் செய்ய முடியாமல் போயுள்ளது. அதிபரின் அழுத்தம் காரணமாக குறித்த மாணவியின் மண்டையில் சக மாணவர்கள் குட்டியுள்ளனர். இதனால் நோய்வாய்ப்பட்ட சிறுமி பகமூன ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான அதிபர் ஹிங்குரக்கொட நீதிமன்றத்தில் அஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com