சோபித்த, ரணில், அநுர, பொன்சேக்கா, சந்திரிக்கா நாளை ஒரே மேடையில்....!
நீதிக்கும் சமத்துவத்துக்குமான ஒன்றியத்தின் மூலம் நாளை (24) நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிரான நிகழ்வில் எதிர்க்கட்சிகள் பலவற்றின் தலைவர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவும் பங்குகொள்ளவுள்ளதாகத் தெரியவருகின்றது.
நாளை (24) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு புதிய நகர சபையில் நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான கருத்தரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரத்துங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக நீதிக்கும் சமத்துவத்துக்குமான ஒன்றியத்தின் குழு உறுப்பினர் ரவீ ஜயவர்த்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தத் தலைப்பில் வேறு வேறாக நின்று கதைத்துள்ள தலைவர்கள் இவ்வொன்றுகூடலில் ஒரே மேடையில் பேசவிருப்பது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும் எனவும் ரவீ ஜயவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
3 comments :
USA had worked to re-union oppotion leader.
It's really a good sign for a better future..
This is the way we can challenge this dictatorship government. Keep it up!
Also Tamil and Muslim leaders should joint with them. Whole parties tie together. Otherwise all opposition parties will be systematically eliminated by MR soon.
This Opposition Leaders will sale Country to USA ,We want President Mahinda Rajapakse only, he is great, " dictatorship government "is Propaganda of opposition.
Post a Comment