பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவிற்கு மேலும் நிதியுதவி!
இலங்கைகான சீனத் தூதுவரின் மனைவி டிங் யூ அமைச்சு வளாகத்தில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவிற்க்கு நிதி நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்நன்கொடையானது, யுத்த வீரர்களின் பிள்ளைகளுக்கான நலன்புரித்திட்டத்திற்கு நிதியுதவியளிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவின் தலைவி அயோமா ராஜபக்ஷ அவர்களிடம் டிங் யூவினால் வழங்கிவைக்கப்பட்டது.
நாடெங்கிலுமுள்ள இராணுவ வீரர்களின் பிள்ளைகளை முன்னேற்றும் நோக்குடன் சேவா வனிதா பிரிவானது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதுடன் நலன்புரித்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் உப தலைவி இந்து ரத்நாயகவும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment