சனத் ஜயசூரியவிற்கு அவசர சத்திரசிகிச்சை !!
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரியவிற்கு அவசர சத்திர கிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீரென நோய் வாய்ப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரியவிற்கு இவ்வாறு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஆபத்து எதுவும் கிடையாது எனவும் வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment