வவுனியாவில் விபத்து! அதிரடிப் படையினரின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!( படங்கள்)
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தையடுத்து பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பட்டுக் கொண்டனர். வவுனியா தர்மலிங்கம் வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை அதிரடிப்படையினரின் வாகனம் மோதியதில் அவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அப்பகுதியில் திரண்ட பொது மக்கள் ஒன்றுதிரண்டு அதிரடிப் படையினரின் வாகனத்தை முற்றுகையிட்டதுடன் அதிரடிப் படையினரின் வாகனத்தை கொண்டு செல்ல விடாது தடுத்து பொலிஸாருடன் முரண்பட்டக்கொண்டனர்
இதனையடுத்து அதிகளவான பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டதுடன் வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும் வருகை தந்தபோது மக்களுடன் பேச்சு நடத்தியதுடன் அதிரடிப்படை வாகனத்தின் சாரதியை கைது செய்திருந்தனர்.
இன்று 2 மணியிளவில் இடம்பெற்ற இவ் விபத்திலேயே வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த வாமதேவன் ரேகா என்ற 35 வயது பெண் காயமடைந்துள்ளார்.
0 comments :
Post a Comment