கலியாண வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் விபத்தில்! ஐவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா டெஸ்போர்ட் மேற்பிரிவிலிருந்து தலவாக்கலை கல்கந்த பகுதிக்கு கல்யாண வீடு ஒன்றிற்கு சென்ற தனியார் பஸ் ஒன்று நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் நானுஒயா குறுக்கு பாதையில்விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12.07.2014 அன்று காலை 11 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகநானுஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பஸ்ஸில் 30 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக பள்ளம்முள்ள இந்த பாதை வழுக்குவதன் காரணமாக மேற்படி பஸ் வழுக்கி சென்று வீதியை விட்டு விலகி தேயிலைப்பகுதியில் சிக்கி விபத்துக்குள்ளாகியிருப்பதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுங்காயம்பட்ட 5 பேருக்கு பெரும் பாதிப்பு இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment