நாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்தால் மட்டும் போதாது!
பிள்ளைகளுக்கு முத்தம் கொடுப்பதால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அநுராதபுரத்தில் தெரிவித்திருக்கின்றார்.
“எங்கள் பார்வை” என்ற கொள்கை தொடர்பில் இரத்தினபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு .உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எங்கள் நாட்டுக்கு இன்று தேவையாக இருப்பது மனித வளத்துடன் கூடிய தேசமாகும். அவ்வாறான ஒரு நாட்டை கண்கட்டு வித்தையினாலோ அலாவுத்தீனின் அற்புத விளக்கினாலோ இல்லை எங்கள் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுப்பதினாலோ பெற்றுக் கொள்ளவியலாது. அதற்காக நாங்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்.
செல்வங்கள் நிறைந்த இந்நாட்டை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அரசாங்கத்திற்கோ முடியாது. அதனைப் பற்றி தெரிந்து கொண்ட நாங்கள் “கிராம முன்னேற்றத்திற்”காக பல்வேறு தரப்பினருடனும் கலந்தாலோசித்து வேலைத் திட்டமொன்றை தயாரித்து அதனை “எங்கள் பார்வை” என்ற பெயரில் முன்வைத்துள்ளோம்.
எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போதைக்கு 66 வருடங்கள் ஆகியுள்ளன. இந்த 66 வருடங்களும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதநதிரக் கட்சியும் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த போதும் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment