மூன்று பிள்ளைகளின் தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர் கைது!
மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயது நபர் ஒருவரை கொலை செய்த 60 வயது முதிவர் ஒருவரை பொலிஸா ரால் கைது செய்துள்ளனர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை, கருங் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்துக் கொலை செய்த முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, அளுபோமுல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment