Tuesday, July 8, 2014

திபெத்திய ஆன்மீக தலைவரின் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி!

இலங்கை பௌத்த மக்கள் தொடர்பில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமா தெரிவித்த கருத்துக்களை நிரா கரிப்பதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரி வித்துள்ளது.

இலங்கை தொடர்பில் எவ்வித அடிப்படையும் அற்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மற்றுமொரு சூழ்ச்சியெனவும் இவ் அமைப்பின் தலைவரான சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரர் தெரிவித் துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கை பௌத்த மக்கள் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தலாய்லாமா தெரிவித்துள்ள கருத்திற்கு, அவர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளமையே காரணமாகும். அவர் தெரிவித்துள்ள கருத்தின் மூலம் இலங்கை மக்கள் மத்தியில் காணப்பட்ட நல்லெண்ணம் பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இலங்கையின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த மேற்கொண்டு வரும் செயல்த்திட்டங்கள் தொடர்ந்தும் முனைப்புடன் முன்னெடுக்கப்படுவதால் இது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மியான்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து பௌத்தர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அன்பு- கருணை போதித்த புத்தர் உயிருடன் இருந்திருந்தால் பௌத்தர்களால் தாக்கப்படும் முஸ்லிம்களை காப்பாற்றியிருப்பார் என ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது/

No comments:

Post a Comment