விளையாட்டாக டுவிட் செய்த பயணி : விபரீதத்தில் முடிந்த மலேசிய விமான விபத்து!! (படங்கள்)
நடக்கவிருக்கும் விபரீதம் அறியாமல் பயணி ஒருவர் விளையாட்டாக செய்த டுவிட் இன்று உண்மையாய் போனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச் 17 விமானத்தில் பயணித்த நெதர்லாந்தைச் சர்ந்த கார் பான் என்ற நபர், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச் 370 விமானம் மாயமானது போன்று, நான் பயணம் செய்யவிருக்கும் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமும் காணாமல் போனால் எப்படி இருக்கும் என்று தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கார் பான் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அத்தனை பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் இவர் போட்ட இந்தப் படம் இப்போது பேஸ்புக்கில் பரவி வருகிறது. பலரும் இதைப் பார்த்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது 10 ஆயிரம் பேரால் பகிரப்பட்டுள்ளது. டுவிட்டரிலும் இது பரவி வருகிறது.
0 comments :
Post a Comment