அரசாங்கம் பற்றிச் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் மூக்கை நுழைத்துள்ளது தென்னாபிரிக்கா!
அரசாங்கம் தென்னாபிரிக்காவைப் பயன்படுத்தி முழு உலகையும் ஏமாற்றுவதற்கே முனைகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவிக்கிறார்.
“தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரெம்போசா என்பவர் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவராவார். அடுத்த ஜனாதிபதியாதவற்குரிய வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன. நான் ஒருவிடயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகின்றேன். அவரின் பெறுமிக்க காலத்தை வீணாக்கவே அரசாங்கம் முயலுகின்றது. நாட்டு நடப்புக்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளாமையினாலேயே அவர் இதில் தலையிடுகின்றார். இந்த அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் முன்னணிக்கும் அதிகாரப் பரவலாக்கலுக்கு தேவையே இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணியுடன் அதிகாரப் பரவலாக்கம் செய்வதில்லை என உடன்படிக்கை செய்துள்ளது. அதிகாரப் பரவலாக்கத்திற்கு அரசாங்கம் முனைந்தால் அரசாங்கம் வீழ்ந்துவிடும்.
உதாரணத்திற்கு தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவங்ச அரசாங்கத்திற்கு 12 வேண்டுகோள்களை முன்வைத்தது. அதில் இந்த தென்னாபிரிக்காவின் தலையீடு பற்றியும் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment