Tuesday, July 1, 2014

குண்டூசியளவேனும் எந்தவொரு உயிருக்கும் அநியாயம் நினைக்காத ஞானசாரருக்கு விசா தடைசெய்யப்பட்டது ஏன்?

அமெரிக்க அரச திணைக்களத்தினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விசா தடையானது தேசிய ரீதியாக நடாத்தப்பட்டுள்ள சூழ்ச்சியின் விளைவே என அவ்வமைப்பின் ஆணையிடு அதிகாரி திலன்த விதானகே தெரிவிக்கிறார்.

அமெரிக்காவின் இந்தியப் பிராந்தியத்திலுள்ள பௌத்த விகாரைக்குச் செல்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஞானசாரருக்கு விசா கிடைத்தது எனவும், அவ்விசாவானது 2016 ஆம் ஆண்டு வரை செல்லுபடியானது எனவும், எவ்வித அறிவித்தலுமின்றி அவ்விசா தடைசெய்யப்பட்டிருப்பதானது அவரின் ஜனநாயக உரிமையை மீறியுள்ள செயலாகும் எனவும் ஆணையிடு அதிகாரி தெரிவிக்கிறார்.

தேசிய தொழிலாளர்களின் அமைப்பு, ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருக்கு எதிராக இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு நாளும், எந்தவொரு மனிதருக்கும் குண்டூசியளவேனும் துன்பம் விளைவிக்காத - தீங்கு நினைக்காத, அளுத்கம கலவரத்தை தொடர்புபடுத்தியுள்ளபோதும் அளுத்கம கலவரத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட பின்னர் உண்மை நிலையைக் கண்டுகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

3 comments:

  1. LOL, balu bala sena

    ReplyDelete
  2. Appaa pickudda tiyaneva pirangi bompe. Kundusi mokkeththede?

    ReplyDelete
  3. என்னாது குண்டூசியா???

    ReplyDelete