விமானியின் சமயோசிதத்தால் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டது! (வீடியோ இணைப்பு)
பாசிலோனா விமான நிலையத்தில் போயிங் 767 ரக விமானம் ஒன்றும், யு340 என்ற விமானமும் ஒரே ஓடு தளத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகவிருந்ததாகவும் அந்த விபத்து விமானியின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டது எனவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவிலிருந்து வந்த விமானம் பாசிலோனா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட அதே ஓடு தளத்தில் மற்றுமொரு விமானம் பறப்பதற்குத் தயாரானது. இந்நிலையில் மற்றுமொரு விமானம் நகர்வதை கவனித்த ரஷ்ய விமானத்தில் விமானி சமயோசிதமாக செயற்பட்டு விமானத்தை வேறு திசைக்குத் திருப்பி குறித்த விமானம் பயணித்த பிறகு ரஷ்ய விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
விமானியின் திறமையை பலரும் பாராட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment