Wednesday, July 9, 2014

நகர்ப்புற புராணங்கள் பாடவேண்டாமாம்! சித்திரவதையை முற்றாக மறுத்தார் அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர்!

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக பிரவேசிக்கும் அகதிகள் இலங்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படு கின்றார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் முன் னாள் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் நிராகரித் துள்ளதுடன், இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் நகர்ப்புற புராணங்கள் எனவும் வர்ணித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல வானொலியான ஏ.பி.சி அலைவரிசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அகதிகள் துன் புறுத்தப்படுவதற்கான எவ்வித சான்றுகளையும் அவதானிக்க முடியவில்லை யென, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தாணிகர் அலுவலகம் தன்னிடம் தெரிவித்ததாக அவர் அந்த செவ்வியின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தாணிகர் அலுவலகம் இவ்விடயம் தொடர்பில் தடயங்களை தேடியதாகவும், ஆனால் துன்புறுத்தல்கள் மேற்கொள் ளப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லையென, தூதரகம் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பியனுப்பப்படும் அகதிகள் தொடர்பில் இலங்கையின் சட்ட நீதிக் கட்டமைப்புக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், துன்புறுத் தல்கள் மற்றும் இன்னல்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை யென தூதுரகம் தெரிவித்ததாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com