வைத்தியசாலைக்குள் புகுந்து வாள் வெட்டு! இளைஞன் பலி! யாழ். சாவகச்சேரியில் சம்பவம்!
இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மேத லில் காயமடைந்து யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரை வைத்தியசாலைக்குள் புகுந்து இளைஞர் குழு ஒன்று நேற்று இரவு வாளால் வெட்டியதில் இளைஞர் பலியாகியூள்ளார்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கொடிகாமம் கச்சாய் அம்மன் கோவிலில் நேற்று மாலை இசை நிகழ்சி நடைபெற்றது. அதனை பார்வையிட்ட இரு இளைஞர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து இரு இளைஞர்களும் தத்தம் இளைஞர் குழுவுடன் வந்து கோயிலுக்கு சற்று தொலைவில் வாள்கள், கத்திகள், பொல்லுகளால் மோதிக்கொண்டனர்.
இம் மோதலில் கு.பிரசன்னா, க.சுகிர்தன், ஞா.குருபரன், உ.அன்பழகன் ஆகிய நால்வர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்தில் வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர் குழு அங்கு சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் அன்பழகன் என்பவர் மீது வாள்களால் வெட்டி விட்டு தப்பிசென்றுள்ளனர்.
அந்த வாள்வெட்டில் உதயகுமார் அன்பழகன் படுகாயமடைந்தார். அதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கெண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை களை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அல்லாரை பகுதியை சேர்ந்த உதயகுமார் அன்பழகன் (வயது 26) என்னும் இளைஞரே வாள் வெட்டில் பலியாகியுள்ளார்.
0 comments :
Post a Comment