மாகாண சபை உறுப்பினர்கள் பகலுணவின் பின்னர் இல்லை…! - மனித உரிமைகள் ஆணையாளர்
மாகாண சபை மாதத்திற்கு இருமுறை மட்டுமே கூடுகின்ற போதும், அந்த இருநாட்களிலும் கூட பகலுணவின் பின்னர் ஒருவர் கூட இல்லாமையினால் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மகாநாமஹேவா குறிப்பிடுகிறார்.
மக்களினால் தெரிவுசெய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் சரிவர அக்கூட்டங்களுக்குச் சமுகந்தராமையால் அம்மக்களின் மனித உரிமை மீறப்படுவதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தயாரித்துள்ள ஐந்தாண்டு திட்டம் தொடர்பில் மத்திய மாகாண சபை தேர்தல் அமைச்சர்களை தெளிவுறுத்தும் செயலமர்வு கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்றபோது விரிவுரையாற்றும்போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment