என்றும் தேர்தல்… எங்களுக்கோ தலையிடி!
அடிக்கடி நடாத்தப்படுகின்ற தேர்தல்கள் காரணமாக தங்களுக்கும் பெரும் தலையிடியென விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.
திக்குவல்லையில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
“எங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போல தேர்தல்கள் அதிகம் நடாத்திய எந்தவொரு தலைவரும் எங்கள் நாட்டில் இருக்கவில்லை. எப்பொழுதும் ஏதேனும் ஒரு தேர்தல் நடாத்திக் கொண்டே இருக்கின்றார். இது எங்களுக்கும் பெரும் பிரச்சினையாகி உள்ளது. ஏன் என்றால் நாங்களும் போக வேண்டும், அது சரிவர நடைபெற ஆவன செய்ய வேண்டும். எங்கள் கடமையை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பதனாலேயே தேர்தல்களில் கலந்துகொள்ளச் செல்கின்றோம்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment