நகத்தின் வடிவங்களும்... மனிதனின் குணநலன்களும்..............
இந்த உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் பரவி உள்ளன. கூட்ட மாகக் கொக்குகள் பறக்கும்போதும், வெள்ளைக் கழுத் தையுடைய பருந்துகள் வானில் வட்டமிடும்போதும் நாம் ஏதாவது நினைத்துக் கொண்டால் அது அப்படியே நடக்குமாம்! அதே போல்தான் ஒரு மனிதனின் விரல்களில் உள்ள நகங் களுக்கும் அவனுடைய குணத்திற்கும் ஒரு லிங்க் இருக்கிறதாம்!
நீளமான நக மொட்டுக்களைக் கொண்டிருப்பவர்கள் பெரிய படைப்பாளிகளாகவும், அகன்ற நகங்கள் உள்ளவர்கள் பேச்சாற்றலில் வல்லவர்களாகவும், சதுர நகங்களைக் கொண்டவர்கள் தைரியசாலிகளாகவும் எலெக்ட்ரானிக்ஸ் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜப்பானியர்களிடம்தான் இந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகத் தலைதூக்கியுள்ளது. இதுபோன்ற நம்பிக்கைகளை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, தூக்கி எறிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.
நகத்தை வைத்தே உடல் நலக் குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை நகமே காட்டிக் கொடுத்து விடுமாம்! சரி, நகத்தின் வடிவங்கள் எப்படி மனிதனின் குண நலன்களை நிர்ணயிக்கின்றன என்பது குறித்துப் பார்க்கலாம். ராசி பலன் போல இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்.
நீளமான நகம் உங்களுக்கு நீளமான நகங்கள் இருந்தால், உங்கள் வலதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால், உங்களுக்கு அதிகமான கற்பனைத் திறனும் இருக்கும். நீங்கள் ஒரு பெரும் படைப்பாளியாகத்தான் இருப்பீர்கள். ஆனால் உங்களுடைய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவீர்கள். எப்போதுமே எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.
அகன்ற நகங்கள் உங்க நகங்கள் அகலமாக இருந்தால், உங்கள் இடதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். இது உங்களுக்கு அதிக பேச்சாற்றலைக் கொடுக்க வல்லதாகும். நீங்கள் உங்கள் மனத்தில் நினைப்பதைத் தெளிவாகப் பேசுவதிலும் வல்லவர்கள். உங்கள் பேச்சில் மக்கள் நிச்சயம் மயங்குவார்கள். மறுபக்கத்தில், நீங்கள் மிகவும் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பீர்கள்.
முட்டை வடிவ நகங்கள் நீங்கள் எதையுமே கூலாக எடுத்துக் கொள்வீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகவும் அதிகம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், நீங்கள்தான் முன் நின்று அதைத் தீர்த்து வைப்பீர்கள். அனைவருக்கும் நீங்கள் 'ச்சோ ஸ்வீட்'தான் !
நகங்கள் இவ்வுலகில் பெரும்பாலானோர் இவ்வகையினர்தான். உங்களுடைய தைரியமும் விடாமுயற்சியும் உங்கள் இரு கண்கள். நீங்கள் எப்போதும் சீரியஸாகவே இருப்பீர்கள். ஆனாலும் உங்களுடைய தலைக்கனம்தான் உங்கள் முதல் எதிரி. அனைவரிடமும் நீங்கள் கொஞ்சம் சமாதானமாகப் போவது உங்களுக்கு நல்லது.
முக்கோண நகங்கள் உங்களிடம் நிறைய ஐடியாக்கள் பொங்கி வழியும். மற்றவர்கள் தவறவிடும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நீங்கள் சரியாகப் பிடித்து விடுவீர்கள். தலைகீழ் முக்கோண வடிவில் உங்களுக்கு நகம் இருந்தால், நீங்கள் எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பீர்கள். மேற்கூம்பிய முக்கோண வடிவில் நகம் இருந்தால், உங்களைச் சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள்.
பாதாம் நகங்கள் உங்களுக்கு உயிர்ப்புள்ள கற்பனைத் திறன் மிகமிக அதிகம். நீங்கள் அன்பானவர், நேர்மையானவர், அமைதியானவர், சகிப்புத் தன்மை கொண்டவர். அடுத்தவர்களிடம் எப்போதுமே உண்மையாக இருப்பீர்கள். ஆனால் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், உடனே சுள்ளென்று கோபம் வந்துவிடும். ஆனாலும் சிறிது நேரத்திலேயே உங்கள் கோபம் காற்றில் மறைந்து போய்விடும். கூர்மையான நகங்கள் நீங்கள் கடும் உழைப்பாளி. வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயங்கவே மாட்டீர்கள். உங்களுக்கு சில விஷயங்கள் பிடிக்காவிட்டாலும், அவை உங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்றால் அவற்றைக் கட்டாயம் செய்து முடிப்பீர்கள். ஆனாலும், உங்களுக்கு சகிப்புத் தன்மையும், பொறுமையும் மிகவும் குறைவு.
0 comments :
Post a Comment