நாட்டுக்குப் பிரதமர் பதவி என்ற ஒன்று தேவை இல்லை!
இந்த நாட்டை சுதந்திர அபிவிருத்தி நாடாகக் கட்டி எழுப்ப வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவையென யும் நாட்டுக்குப் பிரதமர் பதவி என்ற ஒன்று தேவை இல்லை என எனவும் தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறி யுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்யும் கோஷங்கள் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் எழுப்பப்பட்டன. அது பேச்சுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதென்றும் நாட்டைப் பாதுகாக்க நிறைவேற்று ஜனாதிபதி பதவி அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி நாட்டில் தவறான கருத்தை உருவாக்கி உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி பதவி வேட்பாளருக்கு முகம் கொடுக்க முடியாமையினால் பொது வேட்பாளர் பற்றி எதிர்க் கட்சி கனவு காண்கின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஒரே பொது வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. நாட்டில் சகல அரசியற் கட்சிகளுடனும் சகல மக்கள் பிரிவினருடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் ஒரே அரசியல்வாதி ஜனாதிபதி என்றும் பிரதமர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment