Tuesday, July 15, 2014

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்றோம்! அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்வதில்லை!!

இடதுசாரி அரசியல் கட்சிகள் பலவற்றினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க்திற்கு கருத்து முன்வைக்கப்பட்டபோதும், அரசாங்கம் இதுவரை அதனைக் கருத்திற்கொள்ளாமலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்காமலும் இருப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சிகள் என்பன இலங்கையில் நிறைவேற்று அதிகார முறை நீக்கப்பட வேண்டும் என்பதைக் கூறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றைக் கையளித்தது. அதுதொடர்பில் நேற்று முன்தினம் நிடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் போது எடுத்துக் காட்டப்பட்டது. அங்கு இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக ஐவர் கொண்ட குழுவை நியமித்தது.

என்றாலும் அக்குழு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment