Wednesday, July 23, 2014

வேலைக்காரியோடு சல்லாபம் புரிந்த கணவருக்கு உருட்டு கட்டை தாக்குதல் நடத்திய மனைவி.......... குப்பிளானில் சம்பவம் !!

மரவெள்ளி தோட்டத்தில் புல் பிடுங்க, நீர் பாச்சவென் இவர் இளம்பெண்ணொருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் பகல் வேளையில் தோட்டப்பக்கம் எதேச்சையாக அவரது மனைவி சென்றுள்ளார். அவருக்கு ஒரு அதிர்ச்சி காட்சி காத்திருந்தது. வேலைக்கார யுவதியுடன் கணவன் சல்லாபித்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அகப்பட்ட உருட்டுக்கட்டை ஒன்றை கொண்டுபோய் இருவரையும் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். சத்தம் கேட்டு, அருகில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டவர்கள்தான் போய் சல்லாப ஜோடியை காப்பாற்றியுள்ளனர்.

குப்பிளானில் மரவெள்ளி தோட்டம் ஒன்றை வைத்து பிழைப்பு நடத்தி வரும் குடும்பஸ்தர் ஒருவர், வேலைக்காரியோடு பல காலமாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மரவெள்ளி தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்று, அங்கே வேலை பார்க்கும் வேலைக்காரியோடு சல்லாபமாக இருப்பது இவர் வழக்கம். இச்செய்தி மனைவியின் காதுகளுக்கு எட்டியதே இல்லை. சம்பவ தினமான நேற்று முன் தினம் மனைவி திடீரென குறித்த மரவெள்ளி தோட்டத்திற்கு சென்றுள்ளார். கணவர் வேலைக்காரியோடு சல்லாபாக இருந்ததை கண்டே தாக்கியுள்ளார். இத் தாக்குதலை கணவர் சற்றும் எதிர்பாக்கவில்லையாம்.

அடி காயங்களுக்கு உள்ளாகிய கணவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற சென்றவேளை, இது பொலிஸ் கேஸ் . யார் உங்களை தாக்கியது என்று மருத்துவர்கள் விடுத்து விடுத்து கேட்ட பின்னரே கணவன் சம்பவத்தை விபரித்துள்ளாராம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com