பஸ் தீக்கிரை ! (படங்கள்)
ஹப்புத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவாயவி லிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று ஹப்புத்தளை நகரை அண்மித்தபோது பதுளை கொழும்பு பிரதான வீதியில் வைத்து திடீரென தீப்பிடித்து எரிந்து ள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தெய்வாதீனமாக உயிர்த் தப்பியுள்ளனர்.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக ஹப் புத்தளை பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஹப்புத்தளை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நீண்ட நேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment