ரீ.என்.ஏ இரண்டாகப் பிளவுபடுகிறது!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதெனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் ஒருபகுதியினர் கூற, அடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து நின்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் கூட்டமைப்பு இரு பிரிவாக பிளவுபட்டுள்ளதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான இரு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட மாட்டாது என்பதால் வேறான ஒருவரை நியமித்து தமிழ் மக்களின் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பலமாக குரல் எழுப்பியுள்ளனர்.
ஆயினும், அடுத்த சாரார் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஒப்பந்த அடிப்படையில் சில விடயங்களை முன்வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
(கேஎப்)
3 comments :
Very good , thats i had always expected.
கூட்டணி இதுவரை காலம் எதிர்ப்பு அரசியல் நடத்தி, மக்களை உசுப்பேத்தி தங்கள் சுயநலத்தை நிறைவேற்றினார்கள் தவிர தமிழ் மக்களுக்கு, தமிழ் மண்ணுக்கு ஏதாவது உருப்படியாக செய்தார்களா என்றால் ஒன்றுமே இல்லை மாறாக தமிழ் மக்களின் அழிவுகள், இழப்புகள், இறப்புக்களுக்கு மட்டுமே வழி காட்டினார்கள் என்பதை எவரும் அறிவார்கள். இனியும் கூட்டணி பழைய பாணியில் மக்களை ஏமாற்ற முடியாது. தற்போதைய கால கட்டத்தில் சம்பந்தன் ஐயாவின் யோசனைகளை, முயற்சிகள், காய் நகர்த்தல்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. மறைந்த மலையக தலைவர் தொண்டமான் சேர்ந்திருந்து சாதிக்கும் கொள்கையை பின்பற்றுவதே வட கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு, மண்ணுக்கு நன்மையளிக்கும் என்பதே உண்மையாகும்.
கூட்டணி இதுவரை காலம் எதிர்ப்பு அரசியல் நடத்தி, மக்களை உசுப்பேத்தி தங்கள் சுயநலத்தை நிறைவேற்றினார்கள் தவிர, தமிழ் மக்களுக்கு, தமிழ் மண்ணுக்கு ஏதாவது உருப்படியாக செய்தார்களா என்றால் ஒன்றுமே இல்லை. மாறாக, தமிழ் மக்களின் அழிவுகள், இழப்புகள், இறப்புக்களுக்கு மட்டுமே வழி காட்டினார்கள் என்பதை எவரும் அறிவார்கள். இனியும் கூட்டணி பழைய பாணியில் மக்களை ஏமாற்ற முடியாது.
தற்போதைய கால கட்டத்தில் சம்பந்தன் ஐயாவின் யோசனைகளை, முயற்சிகள், காய் நகர்த்தல்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. மறைந்த மலையக தலைவர் தொண்டமானின் சேர்ந்திருந்து சாதிக்கும் கொள்கையை பின்பற்றுவதே வட கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு, மண்ணுக்கு நன்மையளிக்கும் என்பதே உண்மையாகும்.
Post a Comment