Saturday, July 12, 2014

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை காணவில்லை! ஆலய நிர்வாக சபை!

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். சென்ற வருடம் மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகவும் இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மயிலிட்டிக்கு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயத்தினை காணவில்லை தெரிவித்தார்.

ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com