இலங்கை இராணுவம் தமிழீழத் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டுமாம். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்!
இலங்கை இராணுவம் தமிழீழத் தாயகத்திலிருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடுகிறது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடும்போது, தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் இருக்கும் வரை தமிழ் யுவதிகளுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை காரைநகர்ச் சம்பவம் நன்கு தெளிவுறுத்துகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.
தங்களது தாய்நிலத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதற்குக் குரல் கொடுப்பதற்குக் காரணம் இவ்வாறான செயல்களே என, கடற்படை வீரர்களால் சிறுமிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்குட்பட்டது தொடர்பில் காரைநகர் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெற்ற எதிர்பார்ப்பார்ப்பட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment