கட்டுநாயக்க பொலிஸாரால் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பெண்கள் கைது!
கட்டுநாயக்க பொலிஸாரால் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பெண்கள் உட்பட 16 பேரை, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் பிரகாரமே இந்த தேடுதல் நடவடிக்கை ஹல்கஸ்தோட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கட்டுநாயக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment