ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்களை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சிகள் (படங்கள்)
ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள், அங்கு வசிக்கும் ஷியா முஸ்லிம்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
இந்நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய நேரத்திலும் அவர்கள் ஷியா முஸ்லீம்கள் ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். இதில் 50 பேரை கொல்லும் காட்சியை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
50 பேரையும் 2 வேன்களில் ஏற்றி ஒரு பகுதிக்கு போராளிகள் அழைத்து செல்கிறார்கள். பின்னர் அவர்களை வேனில் இருந்து இறக்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு 50 பேரின் கைகளை பின்னால் கட்டி குனிந்தபடி அழைத்து செல்கின்றனர்.
அதன்பின்னர், அங்குள்ள ஆற்று ஓரமாக அவர்கள் அனைவரையும் குனிந்தபடி உட்கார வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து சுற்றி நிற்கும் போராளிகள், அவர்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொல்கின்றனர். பின்னர் பிணத்தை தண்ணீரில் வீசிவிட்டு போராளிகள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். இந்த கோரக்காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
3 comments :
இந்த கொடுமைகளை முஸ்லிம்கள் ஏன் கண்டிப்பதில்லை?
இதை பார்க்கும் போது , 1990 களில் கொலைகார புலிகள் EPRLF , ENDLF, TELO, PLOTE உறுப்பினர்களை சுட்டு , குற்றுயுருடன் பாலுங் கிணற்றில் போட்டு எரித்தது தான் நினைவுக்கு வருகின்றது. ஆனால் இன்று இந்த அமைப்பினர் புலிவாலை பிடித்து கொண்டு பிரபாகரன் பொட்டம்மான் கூட்டால் உருவாக்க பட்ட TNA யுடன் பதவிக்காக அலைகின்றார்கள் . என்ன பிறப்புகளோ ?
Josuva
This is the realface of muslim
Post a Comment