சிறுமியை காதலித்து, கர்ப்பிணியாக்கிய இளைஞன் தலைமறைவு!
ஆணமடு-முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரைக் காதலித்து, கர்ப்பிணியாக்கிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி கருவைக் கலைக்க முற்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அது தொடர்பில் ஆணமடு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த சிறுமியை ஆணமடு மாவட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்த வேளை அவர் ஒன்றரை மாதக் கர்ப்பிணி எனத் தெரியவந்துள்ளது.
ஆணமடு - சிலாபம் வீதியில் காபட் இடும் பணியில் ஈடுபட்ட ஒருவர் தமது வீட்டுக்கு உணவருந்த வருவதாகவும், இதன்போது ஏற்பட்ட காதலால் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும் குறித்த இளைஞர் பொலன்னறுவை பகுதியசை சேர்ந்தவர் என மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் தனது பணிகள் முடிந்ததும் ஆணமடு பிரதேசத்தில் இருந்து சென்று விட்டதாக பொலிஸார் கூறினர்.
0 comments :
Post a Comment