என்னைக் கண்டால் ஜனாதிபதி ஒளிந்து கொள்கிறார்! - சசீந்ர
தன்னைக் காண்கின்ற போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒளிந்துகொள்கிறார் என ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சசீந்ர ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
மொனராகலை தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தற்போது என்னைக் காணும்போது ஒளிந்துகொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளார். ஏன் தெரியுமா கேட்பவற்றை அதிகம் கேட்பவன் நானாயிற்றே… கேட்கக் கூடிய உரிமையும் என்னிடம் உள்ளதே. அடுத்தவர்களை விட நான் அவருடன் நெருங்கி தொடர்பு கொண்டுள்ளேன்.. தொடர்பு வைத்து வருகின்றேன்.. நீண்ட கால தொடர்பு இருந்தபோதும் உறவினைச் சொல்வதில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment