Tuesday, July 22, 2014

சாராயத்திற்கும் வெகுவிரைவில் கதையைக் கொடுப்போம்!

மதுபானம் அருந்துவதிலிருந்தும் மக்களைக் காப்பதற்கு வெகுவிரைவில் செயற்றிட்டமொன்று மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவிக்கிறார்.

கொழும்பில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர், புகைத்தலால் ஏற்படும் கேடுபற்றி பெட்டிகளில் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றைப் பெரிதாக “கட்டவுட்” களாகவும் காட்சிப்படுத்துவதற்கு ஆவன செய்யப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் விலைகோரல் விடுக்கப்பட்டு, குறித்த்தொரு நிறுவனத்திற்கு அந்தச் செயற்றிட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவம் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிகரட் பெட்டிகளில் 80% எச்சரிக்கைப் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்பதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டபோதும், உயர்நீதிமன்றம் 60% படங்களை வெளியிட்டால் போதும் எனக் குறிப்பிட்டது தொடர்பில் தான் அதிருப்தியுறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏதேனும் ஒரு தீர்வைப் பெற்றுள்ளோம். என்றாலும், இந்தத் தீர்வில் எனக்கு திருப்தியுற முடியாது. பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் 80% எச்சரிக்கைப் படங்களை சேர்ப்பதற்கு கையுயர்த்தினர். என்றாலும், நீதிமன்றத்தால் 60% இற்கே எச்சரிக்கை விடப்பட வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அதுதொடர்பில் திருப்தியுற முடியாது.

அதேபோல மதுபானம் தொடர்பிலும் நான் சென்ற வாரம் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது போன்று, மதுபானங்கள் விடயத்திலும் ஏதேனும் ஒரு எச்சரிக்கை முறையை அமுல்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(கேஎப்)

No comments:

Post a Comment