Thursday, July 31, 2014

பிரதேச சபை பிரதான காரியாலயத்தின் கூரைக்கு மேல் ஏறி ஆளுந்தரப்பு உறுப்பினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

அம்பகமுவ பிரதேசசபைக்கு உட்பட்ட கிராமிய மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பிலான திட்டங்களில் பாரபட்சம் காட்டுவதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் வீ.ஜீ. ஹெலபிரிய நந்தராஜ் சபை அறிக்கை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததோடு அம்பகமுவ பிரதேசசபையின் பிரதான காரியாலயத்தின் கூரைக்கு மேல்ஏறி ஒரு மணித்தியா லயத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்ததோடு அட்டன் கொழும்பு பிரதானவீதியில் கினிகத்தேன பிரதேசசெயலாளர் காரியாலயத்தின் முன்னால் பஸ் தரிப்பு நிலையத்தின் கூரைக்குமேல் ஏறி இரண்டு மணித்தியாலயம் எதிர்ப்புதெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேசசபையின் மாதாந்த சபை அறிக்கை பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் திணேஷின் தலைமையில் 31.07.2014 காலை நடைபெற்றது. இந்த மாதாந்த சபை அறிக்கையின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்று அறிக்கைக்கு மாறாக பிரதேசசபையின் சில அதிகாரிகள் செயற்படுவதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் வீ.ஜீ.ஹெலபிரிய நந்தராஜ் குற்றம் சுமத்தினார்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com