பிரபாகரன் தப்பியிருந்தால் சில சர்வதேச நாடுகளுக்கு சந்தோசம்! மகிந்தவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை!
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் உட்பட இயக்கத்தின் முதல்மட்ட தலைவர்களை இறுதி யுத்தத்தின் போது தப்பிச் செல்ல அனுமதி அளிக்காத காரணத்தாலயே மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஷவை பழி தீர்க்க முயற்சிப்பதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஹாரிஸ்பத்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றிய அவர்.
2005ஆம் ஆண்டு 183இ000ம் வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்காவிடின் இந்த நாடு இப்போது எங்கே இருந்திருக்கும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்று 62 வருடங்கள் சென்றே ஒரு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க முடிந்தது. மலேசியா சிங்கப்பூர் இந்தியா ஆகிய நாடுகள் 25 வருடங்களில் சாதித்ததை சாதிக்க எங்களுக்கு 62 வருடங்கள் சென்றன.
நான் அறிந்த காலத்தில் புதிதாக இரண்டு பிரதான வீதிகளே அமைக்கப்பட்டன. ஒன்று டட்லி சேனாநாயக்காவின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட எல்ல - வெல்லவாய வீதி. மற்றயது ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பதுளை- கண்டி ரஜ மாவத்தை வீதி. இதன் திறப்பு விழாவூக்கு பிரத்தானியாவின் எலிசபத் மகாராணி வந்ததிலிருந்நு இதன் முக்கியத்துவம் தெரிகிறது.
பாடசாலைகளுக்கு ஒரு வருடத்தில் 340000ம் மாணவர்கள் முதலாம் ஆண்டிக்கு சேர்க்கப்படுகின்றனர். ஆனாலும் 2005ஆம் ஆண்டு வரை 15இ000ம் மாணவர்கள் மட்டுமே பல்கலைகழகம் செல்கின்றனர்.இதனை பாரத்து சந்தோஷப்படும் சமூகமாக நாங்கள் இருந்தோம். மிகுதி 325000 மாணவர்களது நிலமையை நாம் யாரும் சிந்திக்கவில்லை. வரலாற்றில் முதன் முறையாக தொழில்நுட்ப கல்வியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பட்டதாரிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயாகும்.
மஹிந்த ராஜபக்ஷ இன்று தேசிய தலைவர் மட்டுமல்ல அவர் ஒரு சர்வதேச தலைவராக ஆகி உள்ளார். பஹரேன் பலஸ்தீன் பொலிவியா போன்ற நாடுகளுக்கு சென்ற போது அதி உயர் விருதுகளை வழங்கினார்கள் இலங்கை வரலாற்றில் இவர் போன்று ஒரு தலைவர் உருவாகி உள்ளாரா என்று நாங்கள் எங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும்.
இறுதி யுத்தம் இடம் பெற்ற போது பிரபாகரன் உட்பட முதல் மட்ட தலைவர்களை தப்பிக்க வைக்க மேற்கத்திய உலகம் பாரிய முயற்சிகளை எடுத்தது. முல்லைத்தீவை அண்மித்த கடலில் யூத்த கப்பல்களை நிறுத்தி வைத்திருந்தனர். இவர்கள் எல்ரீ.ரீ.ஈ யினருக்கு உறுதி அளித்திருந்தார்கள் எவ்வாறாவது தலைவர்களை இறுதி நேரத்தில் காப்பாற்றுவதாக.
அவர்களுக்கு அது முடியாது போனது. நீங்கள்தான் எங்கள் தலைவர்களை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தீர்கள் என்று தமிழ் டயஸ்போரா மேற்கத்திய உலகத்தை குற்றம் சாட்டுகிறது இதன் காரணமாகத்தான் இவ்வளது கஷ்டங்களை அவர்கள் எமது நாட்டுக்கு கொடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment