Tuesday, July 1, 2014

இலங்கை எங்கள் தாய்நாடு…. அதில் வேண்டாம் ஒரு துண்டு! - முஸ்லிம் கவுன்ஸில்

முஸ்லிம்கள் பற்றிய தப்பிப்பிராயமே முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது. முஸ்லிம்களின் எந்தவொரு செயற்பாடும் கெட்டதாக, அநீதியாக இருப்பதில்லை என முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் தெரிவிக்கிறார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“1200 ஆண்டுகளாக சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளோம். இது எங்கள் தாய்நாடு. சமுதாயத்தின் தீய பார்வை காரணமாக முஸ்லிம்களுடன் உள்ள புரிந்துணர்வு தூர உள்ளதனால் முஸ்லிம்கள் பற்றி தப்பாகவே எண்ணுகின்றார்கள். முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும், அல்ஜிஹாத், அல்கைதா போன்ற அடிப்படைவாதிகளுடன் கொடுக்கல் - வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. அது தப்பான அபிப்பிராயமாகும்.

“எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு போன்று முஸ்லிம்கள் இலங்கையில் ஒரு பகுதியைக் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டோம். இந்தப் பயங்கரவாதத்தின் மூலம் இன்றும் மன்னார், முல்லைதீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்கள் இன்று ஏதுமின்றி அநாதைகளாக இருந்துவருகின்றார்கள். இதுதான் முஸ்லிம்களின் உண்மையான நிலைமை” எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comment:

  1. மகா தமிழ் ஈழம்July 1, 2014 at 8:56 PM

    முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தவை அத்தனையும் உண்மை.

    ReplyDelete