Sunday, July 27, 2014

நகரபிதா என் மகனைப் பார்த்து முட்டாள் டாக்டர் என்றார்! - சரத் வீரசேக்கர

அம்பாறை நகரபிதா தனது மகனைப் பார்த்து, முட்டாள் டாக்டர் எனக் கூறியதாக பிரதியமைச்சர் சரத் வீரசேக்கர குறிப்பிடுகிறார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பக்தி கீதம் நிகழ்ச்சியினிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

“மேடை செய்வதற்கு வீதியை எடுப்போம் எனச் சொன்னவரும் நகரபிதாதான். எனக்கு அதனால்தான் சிரிப்பு வருகின்றது. 6 மணிக்குப் பிறகு வாகனமில்லை எனச் சொன்னதும் அவர்தான்.

எனது மகன் வீணன் அல்லன். அவர் அம்பாறை வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமையாற்றுகின்றார். எனது மகன் மீது மக்கள் உயிரையே வைத்திருக்கிறார்கள். அவர் அங்கு மிகப் பிரபலம்மிக்கவராக இருக்கின்றார்.

எனது மகன் தேர்தலில் போட்டியிடுவாரோ என நகரபிதா அச்சமுறுகிறார். அதனை மனதில் வைத்துக்கொண்டுதான் அன்று எனது மகன் முட்டாள் டாக்டர் என அவர் சொன்னார்.

நானோ எனது மகனோ யாருடனும் வீணாக சண்டை தர்க்கங்களுக்குச் செல்வதில்லை. நகரபிதாவுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. என்றாலும், அவற்றிலிருந்து அவரை மீட்டி அவரது பெயரை முன்மொழிந்ததும் நான்தான்” எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com