மாணவன் மரணம்! அதிபர் கைது!
ரத்தோட்டை பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் பாடசாலை வளாகத்தில் உள்ள மாமரம் ஒன்றில் ஏறி அதிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை அதிபரே மாங்காய் பறிக்க அம்மாணவனை மரத்தில் ஏற்றியதாக விசாரணைகளின் போது தெரியவந் துள்ளது. இதன்படி பாடசாலை அதிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் ரத்தோட்டை, மவுசாகல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான தரம் 10இல் கல்வி கற்கிறார மாணவனே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான அதிபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.
குறித்த மாணவன் மரத்திலிருந்து விழுந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment