Tuesday, July 29, 2014

ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோக வேண்டாம்! விக்கி விதிவிலக்கானவர் அல்ல!

இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வ தேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி நெருக்கடி யில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கைக்கு எதிரான மாபெரும் சதித்திட்டம். எனவே, அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது எனவும் ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைக் குழுவிற்கு சாட்சியமளிப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோகும் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்

அத்துடன் அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது. அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய வாதிகளின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

1 comments :

ஆதவன் ,  July 29, 2014 at 10:09 AM  


விக்கி ஒரு அரசியல் குழந்தை. விக்கிக்கு அரசியலை பற்றி என்ன தெரியும்? ஒரு மண்ணும் தெரியாது. சும்மா ஒரு பொம்மை முதலரமச்சராய் இருக்கின்றான். கோயில் பிரசங்கம் செய்து கொண்டு திரிந்த விக்கியை முதலரமச்சராக்கியது யாழ் மக்கள் செய்த பெரிய தவறு. தானும் ஒரு தழிழர்களின் தொண்டன் என தமிழ்மக்களை ஏமாற்றி தனது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கு செய்யும் நாடகம் மட்டுமல்ல தமிழ்மக்களை அமிப்பதற்கு செய்யும் வேலைதான் இது. பிரபாகரன் தமிழ் மக்களை அழித்த வேலை இந்த தற்போது விக்கி தொடங்கியுள்ளான்

இந்த விக்கி இலங்கை மக்களிடம் இருந்தும் உலக மக்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பது தனக்கு பெயரும் புகழும் வரவேண்டும் என் மட்டும்தான். மாறாக தமிழ் மக்களின் நலனை அல்ல. இல்லாவிட்டால் மகிந்த இந்த விக்கியை அழைத்தார் தானே மோடியின் பதவியேற்புக்கு போவதற்கு. இந்த விக்கி என்ன சென்னான் தனக்கு இந்திய பிரதமர் மோடி வெந்திலை வைத்து கூப்பிட வில்லை என்று. இந்த விக்கியை வெந்திலை வைத்து கூப்பிடுவதற்கு இவர் ஒரு பெரிய அரசியல் வாதியும் இல்லை. ஒரு பெரிய மாகானும் இல்லை. அதன் விளைவைத்தான் தற்போது தமிழ்மக்கள் மோடி அரசிடம் இருந்து அனுபவிக்கின்றார்கள். அனுபவிக்கவும் போகின்றார்கள். ஒரு வல்லரசு நாட்டின் பிரதமர் இந்த சாதாரண விக்கிக்கு வெந்திலை வைத்து அழைக்க வேண்டும் என நினைத்தது எவ்வளவு மாபொரும் தவறு என்பதை மிக விரைவில் விக்கி புரிந்து கொள்வார்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com