ஈராக்கில் ஏகாதிபத்திய தோல்வியும், யுத்தத்திற்கு எதிரான போராட்டமும்
அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஈராக்கிய இராணுவத்தின் பொறிவும், தீவிரவாத அமைப்பான ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசால் (ISIS) அந்நாட்டின் பெரும் பகுதிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதும், அமெரிக்க ஏகாதிபத்தியமே உருவாக்கி இருந்த அதன் ஒரு தோல்வியாகும். மத்திய கிழக்கு எங்கிலும் தசாப்த காலமாக இரத்தந்தோய்ந்த யுத்தங்களின் மீது எழுந்துள்ள முரண்பாடுகளினது சுமையின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பொறிந்து வருகிறது.
ஈராக்கில் உள்நாட்டு யுத்தத்திற்கு எரியூட்டி வருகின்ற பிரிவினைவாத குழுக்கள், ஏறத்தாழ ஒரு மில்லியன் கணக்கான ஈராக்கியர்களின் வாழ்வை விலையாக கொடுத்து அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் பின்பற்றப்பட்ட ஈவிரக்கமற்ற பிரித்தாளும் கொள்கைகள் மற்றும் சட்டவிரோதமான 2003 படையெடுப்பின் ஒரு நேரடி விளைபொருள்களாகும். சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு முயற்சியில் ISIS போன்ற அல்கொய்தாவுடன் இணைப்பு பெற்ற போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்வதற்காக, 2011இல் இருந்து பொறுப்பற்ற விதத்தில் திரும்பி இருந்த போது, அவை இலக்குகளை மாற்றி, பாக்தாத்தில் வாஷிங்டனின் ஷியைட்-அடிப்படையிலான கைப்பாவை ஆட்சியைத் தாக்கியதும், வாஷிங்டன் கூனிக் குறுகிப் போயுள்ளது. அதைச் சுற்றியுள்ள நாடுகளும் மோதலுக்குள் இழுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒட்டுமொத்த மத்தியகிழக்கும் ஒரு பேரழிவுகரமான பிராந்தியந்தழுவிய யுத்தத்தின் விளம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
முற்றிலும், ஒரு ஒட்டுண்ணித்தனமான மற்றும் அதிதீவிர செல்வந்த ஆளும் மேற்தட்டின் நலன்களுக்கு அவசியப்படும் நடவடிக்கைகளுக்கு, அதிகளவில் மதிப்பிழந்து போன நியாயப்பாடுகளான "பயங்கரவாதம்" அல்லது "மனித உரிமைகள்" என்பதைக் கையிலெடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, எங்கெங்கிலும், சதிசூழ்ச்சிகளையும், வன்முறையையும் உட்கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு பேரழிவை நோக்கி மூழ்கி வருகின்ற நிலையில், உக்ரேனிய நெருக்கடியும் மற்றும் தென்சீன மற்றும் கிழக்கு சீனக் கடலில் பதட்டங்களைத் தூண்டி விட்டு வருவதும், அணுஆயுதமேந்திய ரஷ்ய மற்றும் சீன அரசுகளுடனான பேரழிவுகரமான மோதல்களின் அபாயங்களை முன்னிறுத்துகின்றன.
நியூசிலாந்தின் ஆளும் வர்க்கம் சமீபத்திய ஆண்டுகளில் வாஷிங்டன் உடனான அதன் உறவுகளைப் பலப்படுத்தி உள்ளதோடு, அதன் அனைத்து குற்றங்கள் மற்றும் சூழ்ச்சிகளையும் ஆதரித்து வருகிறது. கடந்த மாதம் பிரதம மந்திரி ஜோன் கேய் ஜனாதிபதி ஒபாமா உடனான அவரது சந்திப்பின் போது, ஈராக் மீதான எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் ஆதரவளிக்க வாக்குறுதி அளித்ததார், மேலும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலின் வரிசையில் நியூசிலாந்தை மிக நெருக்கமாக கொண்டு வந்திருந்தார்.
எதிர்கட்சியான இடது கட்சியும்—அது அரசாங்கம் அமைத்திருந்த போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு துருப்புகளை அனுப்பி இருந்தது—மற்றும் பசுமை கட்சியும் ஈராக் மற்றும் சிரியாவினது தலையீட்டுக்கு அவை ஆதரவு வழங்கும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியிருந்தன. செப்டம்பர் 20 தேர்தலில் எந்தக்கட்சி வென்றாலும் சரி, யுத்த உந்துதலை எதிர்க்கும் பரந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்.
ஏகாதிபத்தியம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான ஒரு புதிய பாரிய சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியமை அங்கே ஒரு அவசர தேவையாக உள்ளது. இருந்த போதினும், ஒரு புதுப்பிக்கப்பட்ட யுத்த எதிர்ப்பு இயக்கமானது, யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு ஆதாரமான இலாபகர அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு பொதுவான போராட்டத்தில், எந்தளவிற்கு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடித்தளத்தில் அது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுகிறதோ அந்தளவிற்கு தான் அது வெற்றி அடைய முடியும்.
இந்த முன்னோக்கை விவாதிக்க, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்கிறோம்.
கூட்ட விபரம்
Wednesday, July 30, 4:15p.m.
Student Union Building, SU219
Victoria University, Wellington, Kelburn campus
0 comments :
Post a Comment