Tuesday, July 22, 2014

பதுளைக்கு தற்போது துறைமுகம் மாத்திரமே குறைவு!

ஊவா மாகாண சபைத் தேர்தலில், வாக்குப் பெட்டிகளைத் திறக்கும்போது அவற்றில் யானைக் குட்டிகள், தீப்பந்தம், மணி ஆகியன இருக்கக் கூடாது என அமைச்சர் நிமல் ஸ்ரீபால த சில்வா குறிப்பிடுகிறார்.

பதுளை ஹேகொட ஆலிகபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“பதுளைக்கு தற்போது துறைமுகம் மாத்திரமே குறைவாக இருக்கின்றது. கடல் இருந்திருந்தால் நான் அதனையும் செய்திருப்பேன். அதனால் பாதை சரியாக இருக்குமானால், கைகளும் சரியாக காட்சிகொடுக்குமாயின் கண்ட கண்டவழிகளில் அரசியல் காடுகளுக்குள் செல்ல வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை.

அதனால் இம்முறை வாக்குப் பெட்டிகளைத் திறக்கும்போது யானைக் குட்டிகள், தீப்பந்தம், மணி இருக்க முடியாது. பதுளை மக்கள் அரசியலில் நன்றிக் கடன் செலுத்தும்முறையை எம்மால் கண்டு கொள்ள முடியும். ஏன் என்றால் பதுளை மக்கள் தற்போது எங்களிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை.” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment