இலங்கை தொடர்பிலான விடயங்களை இந்தியாவிடம் சொல்வேன்! - ரமபோசா
நேற்று முன்தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்த்த விஜயத்தை மேற்கொண்ட தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி இந்தியாவுக்கு தெளிவுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ரமபோசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ரமபோசா இந்தியாவுக்குச் சென்று இந்தியத் தலைவர்களைச் சந்தித்து மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தபோதும், அவரது இந்தியப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment