Saturday, July 12, 2014

வெட்கம் கெட்ட ஜென்மங்கள்! - எம். பௌஸர்

நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கா?
இவர்களைத் தொடர்ந்தும் தெரிவு செய்யும் வாக்காளர் களுக்கா?

முஸ்லிம் மக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜே வி பியினால் முன்னெடுக்கப்பட்ட விவாதத்தில் எந்த முஸ்லிம் எம்பிக்களும் கலந்து கொள்ளவில்லை.

தாமே முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதி நிதிகள் என உரிமை பாராட்டுவதும், ஒரு படி மேலே போய் முஸ்லிம் தேசியத் தலைவர்? தாமே என மார்தட்டுவதிலும் இருக்கும் அரசியல் தன்மையை, இவர்கள் பிரஞ்ஞை பூர்வமாக உணர்ந்திருக்கிறார்களா? அல்லது தமது அரசியல் பிரதி நிதிகள் இவர்கள்தான் என நம்பி தேர்வு செய்யும் மக்கள் உணர்கிறர்களா? என்பது என்னைப் போன்றவர்களை பின்தொடரும் நீண்ட நாளைய அரசியல் கேள்வியாக இருக்கிறது..

ஒரு சமூகத்தின் உண்மையான அரசியல் பிரதி நிதிகள் என்போர் யார்? அவர்கள் தமது மக்களின் கண்ணும் கருத்தும் மனச்சாட்சியாகவும் இருத்தல் வேண்டுமல்லவா...

யாதார்த்த நிலைமையில் யார் இந்த விவாதத்தினை பாராளுமன்றத்தில் முன்னெடுத்து இருக்க வேண்டும்? முஸ்லிம் அரசியல் கட்சிகள் , முஸ்லிம் அரசியல் பிரதி நிதிகள் என சொல்பவர்கள், உரிமை கோருபவர்களுக்கல்லவா இதற்கான பொறுப்பு உள்ளது.

சரி அப்படி ஒரு கவன ஈர்ப்பு, எதிர்ப்பு விவாதத்தினை முன்னெடுக்க முதுகெலும்பு இல்லாது விட்டால் , விவாதத்திலாவது பங்கு பற்றி தமது தமது குரலை பதிவு செய்வதுடன், தமது உறுதியான அரசியல் குரலை வெளிப்படுத்தும் , தமது ஒருமைப்பாட்டினை தெரிவிக்கும் அரசியல் ,சமூக சக்திகளுக்கு தமது தோள் கொடுப்பையாவது செய்ய வேண்டுமல்லவா?

ஏன் இவர்களை முஸ்லிம் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்? இந்த கட்சிகளை ஏன் இன்னும் ஆரத்தழுவி நிற்கிறார்கள்/?

முஸ்லிம்களின் பெயரால் இவர்கள் தொடர்ந்தும் செய்கின்ற அற்ப அரசியல் வங்குரோத்துத் தனம், பொது அரசியல் அரங்கில் அனைவரையும் வெற்கித் தலை குனிய வைக்கிறது.

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது வாய்மூடி மௌனிகளாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நெஞ்சில் உரமற்ற தன்மையால்தான் பெருமளவில் ஏற்படுகிறது. அத்துடன் அக்கட்சிகளுக்கு, அந்த அமைப்புகளுக்கு ஒரு விரிந்த அரசியல் தன்மையும் பார்வையும் உள்ளது. ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு மனிதர்கள் என்கிற அடிப்படையில் அடையாள வேறுபாடுகள் தாண்டி குரல் தருவது கடமை , பொறுப்பு என்கிற மன உணர்வும் கொள்கைத் தெளிவும் உள்ளது.

ஆனால் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ சொந்த மக்களுக்கும் குரல் எழுப்ப மாட்டார்கள், சிங்கள,தமிழ், மலையக மக்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் எழுப்ப மாட்டார்கள்.

நமக்குத் தேவையா இப்படியான அரசியல் தலைமைகள்????

இப்படியான கேள்விகளை எழுப்பும் நண்பர்களை நோக்கி , இந்த கையாலாகாத அரசியல் தலைமைகளின் விசுவாச ஊழியர்கள், அபிமானிகள் சாட்டைகளை தூக்கி விளாச புறப்பட்டு விடுவார்கள்.

அன்பார்ந்த நண்பர்களே, உங்கள் கட்சி , தலைமை விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது. சமூகத்தினை விடவும் சொந்த மக்களினை விடவும் எந்த கட்சியும் எந்த தலைமையும் நமக்கு முக்கியமானதல்ல.....

மக்களுக்கும் சமூகத்திற்குமே கட்சியும் தலைமையுமே தவிர, இந்த பெயர்ப் பலகைகளுக்காகவும் தனி மனிதர்களுக்காவும் சமூகமும் கட்சிகளும் இருக்க முடியாது...

முஸ்லிம் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறும் காலம் தொடங்கி விட்டது... புற அடுக்குமுறையும் நெருக்கடிகளும் இந்த விழிப்பு நிலையை அதிகப்படுத்தி வருகிறது

நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளை பார்க்கின்ற போது இந்த ஆழ மொழி பொருத்தமாக இருக்கிறது.. /தானும் படுக்கமாட்டானாம்.. தள்ளியும் படுக்க மாட்டானாம்/,,,,ஹீ...ஹீ...ஹீ,,,

யாருக்கு வெட்கம் ?யாருக்கு??

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com