அந்த பலசேனா, இந்த பலசேனா, அந்த பலய, இந்த பலய எனவந்து எங்கள் ஊர்களுக்கு தீமூட்டுகிறார்கள்!
மத்துகம பிரதேச சபை உறுப்பினர் நாகதிஸ்ஸ தேரர்!
எங்களது சில தேரர்கள் அந்த பலசேனா, இந்த பலசேனா, அந்த பலய, இந்த பலய எனச் சொல்லிக் கொண்டு வந்து எங்கள் ஊர்களுக்கு தீமூட்டிச் செல்கிறார்கள். அதுதொடர்பில் எங்களது பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.
மத்துகம பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் போந்துபிட்டியே நாகதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -
ஆந்தாவல பிரதேசத்தில் வாழ்ந்துவந்த வயோதிப தாயொருத்தி யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் இறந்துள்ளார். அந்தத் தாயின் மகனொருவன் தர்காநகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றிற்கு அனுமதியின்றி உள்நுழைந்ததால் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும், பிரதேச தேரர் ஒருவரும் இதுபற்றிக் குறிப்பிடும்போது, அந்த்த் தாய் தனது மகன் நையப்புடைக்கப்பட்டதை அறிந்து, அதன் சோகத்தினாலேயே இறந்துள்ளார் எனத் தெரிவித்தனர்.” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment