Thursday, July 3, 2014

எங்கே என் செருப்பு? கட்டிட விபத்தில் மீண்டவரிடம் இருந்து வந்த முதல் வார்த்தை.................

சென்னை கட்டிட விபத்தில், இடிபாடுகளில் இருந்து காப்பாற்ற ப்பட்ட ஒருவர், தன்னை மீட்டவர்களிடம் தன் செருப்பு எங்கே என கேட்ட வினோதம் நடந்துள்ளது. அடுக்குமாடி கட்டிட விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையில் உயிருடன் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்க மீட்பு படையினர் மோப்ப நாய்களை பயன்படுத்தியுள்ளனர். அப்போது மோப்ப நாய் ஒரு இடத்தை பார்த்து நீண்ட நேரம் குலைத்துள்ளது. அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட மீட்பு படையினர் உடனடியாக அந்த இடத்தில் இருந்த தடைகளை அகற்றி தக்க உபகரணங்களை பயன்படுத்தி தேட தொடங்கியுள்ளனர்.

இடிபாடுகளுக்கு இடையே கமெராவை பயன்படுத்தி பார்த்த பொழுது,ஒரு நபர் உள்ளே சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அவரை மீட்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை என்பதை உணர்ந்த மீட்பு படையினர் தங்கள் பணியினை தொடங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் உள்ளே இருக்கும் நபரின் குரல் கேட்க தொடங்கியுள்ளது.

இதனையடுத்து அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே இடிபாடுகளை நீக்கும் பணியினை வேகமாக செய்துள்ளனர். பின்னர் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை உயிருடன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். மயக்கத்தில் இருந்த அவர் வெளியே வந்ததும் மீட்பு பணியினரை பார்த்து உதிர்த்த முதல் வார்த்தை, 'எங்கே என் செருப்பு?' என்பதாகும். உடனே மீட்பு படைத் தலைவர் அவரிடம் கனிவாக, நாம் புதிதாக காலணிகள் வாங்கி கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு, அவருக்கு குடிக்க தண்ணீர் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, நீண்ட நாட்கள் எதுவும் உண்ணாமல் சோர்வில் மயக்கமுற்று இருந்த அவர் தன்னை விகாஸ் குமார் என்றும், தான் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதையும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment