Wednesday, July 16, 2014

பிளவுபடாத இலங்கையை ஏற்றுக்கொள்கின்றார்களாம் த.தே.கூ! நீதிமன்றத்திடம் தெரிவிப்பு

பிளவுபடாத இலங்கையை ஏற்றுக்கொள்வதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்கு சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக 7 மனுக்கள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்ட போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணகஈஸ்வரன், பிளவுபடாத இலங்கையை ஏற்றுக்கொள்வதாக வழங்கப்பட்ட சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண தேர்தலின்போது சமர்ப்பித்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும், கட்சி யாப்பிலும் தனி இராச்சியம் தொடர்பாக குறிப்பிடப் பட்டிருந்தது, இதனால் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தையும், தேர்தல் முடிவுகளையும் வலுவற்றதாக்குமாறு கோரி, 7 அமைப்புகள் சமர்ப்பித்த 7 மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

சங்கைக்குரிய பெங்கமுவே நாலக தேரர், கலாநிதி குணதாச அமரசேகர, கால்லகே புண்ணியவர்தன, யூ.ஏ. அபேகோன், உனவட்டுன அநுசரசிறி, எச்.கே.டி. சந்திரசோம ஆகியோரே, இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ரோஹினி மாறசிங்க, பிரியந்த ஜயவர்தன ஆகிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் மனு ஆராயப்பட்டது. நாட்டில் வாழும் அனைவரும் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென, நீதிமன்றத்தின் முன் ஆஜராகும் அனைவருக்கும் சிங்களம், தமிழ் முஸ்லிம் ஆகிய இன மத பேதமின்றி சமமாக கருதப்படுவார்கள் என, பிரதம நீதியரசர் அங்கு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய ஆகியோரும், சட்டமா அதிபரும், பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தனி இராச்சியத்தை இலங்கையில் ஏற்படுத்தும் அரசியல் கட்சியாக அக்கட்சியை பிரகடனப்படுத்துமாறு, மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர். பிரதிவாதி கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன், ஏ. சுமந்திரன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மனுதாரர்கள் சார்பில் கனிஸ்க விதாரண, பாலித கமகே, கபில கமகே ஆகிய சட்டத்தரணிகளும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரீன் புள்ளேயும் ஆஜராகினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com