நான் சொல்ஹெய்முடன் படம் எடுத்துக் கொண்டது உண்மை...! புலம் பெயர் தமிழர்களுடன் கலந்தாலோசனையும் செய்தேன்! - ஞானசாரர்
தான் புலம்பெயர் தேசாபிமானம்மிக்க தமிழர்களின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தேனே தவிர, எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையுடம் நடாத்தவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகிறார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தான் புலி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகக் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“நாங்கள் நோர்வே சென்றது உண்மை. அது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சொல்ஹெய்முடன் படம் எடுத்துக் கொண்டேன். அமெரிக்காவின் ஒபாமாவுடன் படம் எடுக்க அவகாசம் கிடைத்திருந்தால் அவருடனும் எடுத்துக் கொள்வேன். அதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை” எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment