கொன்சலிற்றா கன்னித் தன்மையுடனே இருந்தார் - சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம்!
கடந்த ஏப்பிரல் மாதம் 14ஆம் திகதி யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா கன்னித் தன்மையுடனே இருந்தார் என சட்ட வைத்திய அதிகாரி இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளித் துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்ட வைத்திய அதிகாரி பொ.சிவரூபன் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையினை இன்று மன்றில் சமர்பித்து சாட்சியம் அளித்தார். இதன்போது குறித்த பெண் கன்னித்தன்மையுடன் இருந்ததாகவும் அவரது உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் அவர் நீரில் மூழ்கியதால் தான் உயிரிழந்தார் எனவும் சாட்சியம் அளித்திருந்தார்.
கொன்சலிற்றாவின் இறப்புக்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த நீதிமன்ற விசாரணையின்போது அப் பெண் பாவித்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையினை பொலிசார் இன்றைய விசாரணையின் போது சமர்பிக்க கோரியிருந்த போதும் அவ் அறிக்கை இன்றைய தினம் மன்றில் சமர்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment