சூலத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ள அதிசயம்! வவுனியாவில் சம்பவம்.......(வீடியோ)
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள சூலமொன்றில் பெண் உருவ முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மாலை கோவிலில் உள்ள சூலத்தை சிலர் அவதானித்த போது சூலத்தின் நடுப்பகுதியில் உள்ள அகலமான இடத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ளதை அவதானித்துள்ளனர். இதனை யடுத்து மக்கள் இதனை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் தகவல் ஏனைய கிராமங்களுக்கும் பரவியுள்ளதால் பொது மக்கள் மாடசாமி ஆலயம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இவ் உருவம் அம்மனின் முகம் எனவும் மாடசாமியின் உருவம் எனவும் அப்பகுதியில் சூழ்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.
0 comments :
Post a Comment